முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக கோப்பையில் விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது: ராபின் உத்தப்பா

செவ்வாய்க்கிழமை, 7 ஏப்ரல் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : ஐந்து வருடங்களாக இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் இருந்தாலும், உலக கோப்பையில் விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 2006-ம் ஆண்டு அதிரடி பேட்ஸ்மேனாக களம் இறங்கியவர் ராபின் உத்தப்பா. 34 வயதாகும் உத்தப்பா தனது 20 வயதிலேயே இந்திய அணியில் அறிமுகம் ஆனாலும் தொடர்ந்து அவரால் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியவில்லை.

அவ்வப்போது இடைவெளி விட்டு விட்டு அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் கடைசியாக 2015 ஜூலை 19-ம் தேதிக்குப்பின் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியவில்லை. இருந்தாலும் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

தற்போது வரை நான் போட்டிக்குரிய நபராக இருக்க விரும்புகிறேன். இந்த எண்ணம் எனது மனதிற்குள் இருந்து கொண்டே இருக்கிறது. போட்டிக்குரிய நபராக இருந்து சிறப்பாக விளையாடுவேன்.

உண்மையிலேயே இன்னும் எனக்கு உலக கோப்பை இருப்பதாக நம்புகிறேன். குறிப்பாக டி20 வடிவிலான கிரிக்கெட்டில் இருக்கிறது என்றார். 2007-ம் ஆண்டு டோனி தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்லும் போது அணியில் இடம் பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக 46 ஒருநாள் போட்டிகளிலும், 13 டி20 கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து