வடகொரியாவில் அதிபர் கிம்மின் சகோதரி ஆட்சிக்கு வர வாய்ப்பு?

சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2020      உலகம்
Kim sister 2020 04 25

வடகொரியாவில் கிம் ஜாங் சகோதரி ஆட்சிக்கு வந்தால் முந்தைய ஆட்சியை விட கொடூரமாக இருக்கும் என ஆய்வாளர்கள் கணித்து உள்ளனர்.

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.  கிம் ஜாங் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை என்றால் அவரது சகோதரி கிம் யோ ஜாங் ஆட்சிக்கு வர வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கிம் யோ ஆட்சி என்பது 8 ஆண்டு கால கிம் ஜாங் ஆட்சியை விடவும் மிக கொடூரமாக இருக்கும் என ஆய்வாளர்  நடாஷா லிண்ட்ஸ்டேட்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார். வடகொரிய தலைவர் கிம் ஜாங் தம்மை எதிர்ப்பவர்கள் மீது எந்த இரக்கமும் காட்டுவதில்லை, அது தமது உறவினர்களாக இருந்தாலும் கடுமையாகவே நடந்து கொள்வார். ஆனால் கிம் ஜாங் ஆட்சியை விடவும், அவரது சகோதரி கிம் யோ ஆட்சி மிகவும் கொடூரமாக இருக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். நவீன புதிய ஆயுதங்கள் மீது அதிக மோகம் கொண்ட கிம் யோ, வடகொரியாவின் அடுத்த தலைவராக தம்மை தயார்படுத்தியும் வந்துள்ளதாக கூறப்படுகிறது.பெண் என்பதால் வடகொரிய ஆளும் வர்க்கம், கிம் யோவை புறக்கணிக்காது என்றும், கிம் குடும்பத்தாரை அங்குள்ள மக்கள் கடவுளுக்கு நிகராகவே பார்க்கிறார்கள் எனவும் நடாஷா குறிப்பிட்டுள்ளார். கிம் யோ ஆட்சி பொறுப்புக்கு வந்தால், தற்போது கிம் ஜாங் எவ்வாறு பார்க்கப்படுகிறாரோ அதே போன்ற நிலையில் கிம் யோ உயர்த்தப்படுவார். அது மட்டுமின்றி, தமது சகோதரர் கிம் ஜாங் உலக நாடுகளை எதிர்கொண்டதை விட கிம் யோ கொஞ்சம் கடுமையாகவே நடத்த வாய்ப்பிருப்பதாக நடாஷா தெரிவித்துள்ளார்.

கம்ப்யூட்டர் அறிவியல் பட்டதாரியான கிம் யோ, சமீப காலமாக தமது சகோதரருக்கு உதவியாக அரசு அலுவல்களிலும் ஈடுபட்டு வருகிறார். தமது 9-வது வயதில் இருந்தே சுவிட்சர்லாந்தில் கல்வி பயின்ற கிம் யோ, பல்கலைக் கழக படிப்பை வடகொரியாவுக்கு திரும்பிய பின்னர் முடித்தார். கிம் யோ தொடர்பில் தெரிந்து வைத்திருக்கும் கிம் ஜாங்கின் மனைவி ரி சோல் ஜூ, கண்டிப்பாக ஆட்சியை கைப்பற்றும் நடவடிக்கையில் இறங்க மாட்டார் என்றே கூறப்படுகிறது. வடகொரியாவின் இதுவரையிலான ஆயுத குவிப்புகளுக்கு காரணம் கிம் யோ என நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது மட்டுமின்றி கிம் யோ உண்மையில் அவரது தந்தை, தாத்தாவை விடவும் கொடூர புத்தி கொண்டவர் எனவும், அது கிம் ஜாங் தெரிந்து வைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து