எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தேனி மாவட்டம், பழனிசெட்டிப்பட்டி பேரூராட்சியில் 34 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற பாதாள சாக்கடைத் திட்டத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். மேலும், சென்னை, அரியலூர், தஞ்சாவூர், ஈரோடு, தேனி, கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, நாகப்பட்டினம், திருவாரூர், தருமபுரி, இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 296 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டப் பணிகளையும் முதல்வர் திறந்து வைத்தார்.
நகர்ப்புறங்களில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துதல், அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை வழங்குவது உள்ளாட்சி அமைப்புகளின் தலையாய கடமைகளாகும். இத்தகைய பணிகளை மேற்கொள்ளும் உள்ளாட்சி அமைப்புகளின் அடிப்படை உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையிலும், பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தேனி மாவட்டம், பழனிசெட்டிப்பட்டி பேரூராட்சியில் 34 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற பாதாள சாக்கடைத் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த பட்லூர் மற்றும் 30 குடியிருப்புகளுக்கு 6 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர் அபிவிருத்தி திட்டம், தேனி மாவட்டம், தேனி ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த அரண்மனைப்புதூர் மற்றும் 4 குடியிருப்புகளுக்கு ஒரு கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தி திட்டம்; போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்தில் கோடாங்கிப்பட்டி மற்றும் 3 குடியிருப்புகளுக்கு 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தி திட்டம், போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்தில் மஞ்சநாயக்கன்பட்டி மற்றும் 2 குடியிருப்புகளுக்கு 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தி திட்டம், நத்தம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள குடிநீரைப் பயன்படுத்தி திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 20 ஊரகக் குடியிருப்புகளுக்கு 3 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம், ஈரோடு மாவட்டம், பவானி ஊராட்சி ஒன்றியம், மைலம்பாடி ஊராட்சியில் உள்ள 54 குடியிருப்புகளுக்கு 5 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தற்போது பயன்பாட்டில் உள்ள வரதநல்லூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தை அபிவிருத்தி செய்து வழங்கும் கூட்டு குடிநீர் அபிவிருத்தி திட்டம்,
அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சி மற்றும் விடுபட்ட பகுதிகளுக்கு 30 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற பாதாள சாக்கடைத் திட்டம், கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் 75 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற பாதாள சாக்கடைத் திட்டம், நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி, விருத்தாசலம் சாலையில் உள்ள வாரச் சந்தை வளாகத்தில் 2 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகராட்சி அலுவலகக் கட்டிடம், தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மாநகராட்சி, காந்திஜி சாலையில் 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சி அலுவலகக் கட்டிடம் மற்றும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நோயாளிகள் உடனிருப்போர் தங்கும் கட்டிடம், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சி, கணேசபுரத்தில் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்பு மற்றும் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நோயாளிகள் உடனிருப்போர் தங்கும் கட்டிடம்,
சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி மற்றும் முகலிவாக்கம் ஆகிய பகுதிகளுக்கு 126 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான விரிவான குடிநீர் வழங்கும் திட்டம், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை மாவட்டம், திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட மல்லிகாபுரம், அடையாறு மண்டலத்திற்குட்பட்ட வேளச்சேரி ஆகிய இடங்களில் ஒரு கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையங்கள், திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட திருவொற்றியூர் நெடுஞ்சாலை மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலத்திற்குட்பட்ட ஈஞ்சம்பாக்கம் ஆகிய இடங்களில் 21 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 நகர்ப்புர சமூகநல மருத்துவமனைகள், பேரூராட்சிகள் நிர்வாகம் சார்பில் சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூர் பேரூராட்சியில் ஒரு கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வாரச்சந்தை கட்டிடம், மதுரை மாவட்டம், பாலமேடு பேரூராட்சியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சந்தை கட்டிடம், தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பேரூராட்சியில் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையம், நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் பேரூராட்சியில் 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்பு மற்றும் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சந்தை கட்டிடம், திருவாரூர் மாவட்டம், குடவாசல் பேரூராட்சியில் ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையம், தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூராட்சியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வாரச்சந்தை கட்டிடம், இராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சந்தை கட்டிடம் என மொத்தம் 330 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கான திட்டப் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலாளர் க. சண்முகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் சி.என். மகேஸ்வரன், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டி.என். ஹரிஹரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
ஆசியாவை தாக்கிய 2 சூறாவளி புயல்கள்; இதுவரை 1,200 பேர் பலி
02 Dec 2025ஜகார்த்தா : ஆசியாவை தாக்கிய 2 சூறாவளி புயல்களால் நடப்பாண்டில் இதுவரை 1,200 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-12-2025.
02 Dec 2025 -
கோவை, நீலகிரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
02 Dec 2025சென்னை, கோவை, நீலகிரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
‘டித்வா’ புயலால் காரணமாக இலங்கையில்14 லட்சம் பேர் பாதிப்பு
02 Dec 2025கொழும்பு, டித்வா புயலால் இலங்கையில் சுமார் 3 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை திரும்ப பெற்றது அரசு
02 Dec 2025சென்னை, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது.
-
மலேசியாவில் உள்ள முருகன் கோவிலில் அஜித் சாமி தரிசனம்
02 Dec 2025கோலாலம்பூர், மலேசியாவில் உள்ள பத்து மலை முருகன் கோவிலில் அஜித்குமார் சாமி தரிசனம் செய்தார்.
-
சென்னை, தண்டையார்பேட்டையில் பல்வேறு வசதிகளுடன் அரசு அச்சகப்பணியாளர்களுக்கு ரூ. 39 கோடியில் குடியிருப்புகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
02 Dec 2025சென்னை, சென்னை தண்டையார்பேட்டையில் பல்வேறு வசதிகளுடன் அரசு அச்சகப்பணியாளர்களுக்கு ரூ.39 கோடியில் குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படம்
02 Dec 2025இயக்குனர் கணேஷ் கே.பாபுவின் முதல் தயாரிப்பான புதிய படத்தின் தொடக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு இயக்குநர்கள் H.
-
சென்னை மழை பாதிப்பு குறித்து களத்தில் துணை முதல்வர் உதயநிதி நேரில் ஆய்வு
02 Dec 2025சென்னை : கனமழை தொடர்பாக சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார்.
-
எஸ்.ஐ.ஆர். உள்ளிட்ட விவகாரம்: மக்களவையில் எதிர்க்கட்சிகள் 2-வது நாளாக தொடர் அமளி : அவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
02 Dec 2025புதுடெல்லி : எஸ்.ஐ.ஆர்.
-
தொடரட்டும் ஆசிரியரின் தொண்டறம்: கி.வீரமணிக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
02 Dec 2025சென்னை, தொடரட்டும் ஆசிரியரின் தொண்டறம் என்று கி.வீரமணியின் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
'சஞ்சார் சாத்தி' செயலியை பதிவு செய்வது கட்டாயமா? மத்திய அரசு விளக்கம்
02 Dec 2025புதுடெல்லி, அனைத்து மொபைல் போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலியை பதிவு செய்வது கட்டாயமா? என்பது குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
-
நாட்டைவிட்டு தப்பிய 15 பொருளாதார குற்றவாளிகளால் ரூ.58,000 கோடி இழப்பு: மத்திய அரசு
02 Dec 2025புதுடெல்லி, நாட்டைவிட்டு தப்பியோடிய 15 பொருளாதார குற்றவாளிகளால் ரூ. 58,082 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
BP180 திரை விமர்சனம்
02 Dec 2025வட சென்னை பகுதியில் உள்ள ஒரு அரசு மருத்துவமனை மருத்துவரான தன்யா ரவிச்சந்திரன், தன் வேலையில் நேர்மையாக ஒரு விசயத்தை செய்கிறார்.
-
சென்னையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் தீவிரம்: அமைச்சர்
02 Dec 2025சென்னை : சென்னையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர் சேகர்பாபு, அரசின் நடவடிக்கையால் பெரும்பாலான இடங்களில் மழை
-
முறையான காரணம் இன்றி பொதுநல வழக்கை திரும்பபெற அனுமதி கோரினால் அபராதம் ஐகோர்ட் மதுரை கிளை எச்சரிக்கை
02 Dec 2025மதுரை, பொதுநல வழக்கை முறையான காரணம் இன்றி திரும்ப பெற அனுமதி கோரினால் அதிக அபராதம் விதிக்கப்படும் என்று ஐகோர்ட் மதுரை கிளை எச்சரித்துள்ளது.
-
வெள்ளகுதிர திரை விமர்சனம்
02 Dec 2025சாலை வசதியே இல்லாத உறவினர் வீட்டில் தங்கும் நாயகன் ஹரிஷ் ஓரி அங்கு கிடைக்கும் ஒருவித போதை பொருளை வைத்து பணம் சம்பாதிக்க முயற்சிக்கிறார்.
-
யாரு போட்ட கோடு இசை வெளியீட்டு விழா
02 Dec 2025டீச்சர்ஸ் ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் டாக்டர்.வினிதா கோவிந்தராஜன் தயாரிப்பில், லெனின் வடமலை இயக்கத்தில், பிரபாகரன் மற்றும் மேஹாலி மீனாட்சி நடித்திருக்கும் திரைப்படம் ‘யார
-
ரஜினி கேங்க் திரை விமர்சனம்
02 Dec 2025நாயகன் ரஜினி கிஷனும், நாயகி திவிகாவும் ஊரை விட்டு ஓடிப்போகும் போது அவர்களுக்கு முனீஷ்காந்த் தனது காரில் லிப்ட் கொடுக்கிறார்.
-
தங்கம் விலை சற்று சரிவு
02 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்றும் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று குறைந்து விற்பனையானது.
-
எஸ்.ஐ.ஆர். விவகாரம்; பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
02 Dec 2025புதுடெல்லி : எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-
மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு முதலிடம் : துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்
02 Dec 2025சென்னை : மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
தேர்தல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இன்று சந்திக்கிறது காங், குழு
02 Dec 2025சென்னை : வரும் சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 பேர் கொண்ட குழு இன்று சந்திக்கிறது.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சி.பி.ஐ. விசாரணையை ரத்துசெய்ய வேண்டும் : சுப்ரீம்கோர்ட்டில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல்
02 Dec 2025சென்னை : கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணையை ரத்துசெய்ய கோரி சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
பசுபதி நடிக்கும் குற்றம் புரிந்தவன்
02 Dec 2025Sony LIV தமிழ் ஒரிஜினல் தொடர் குற்றம் புரிந்தவன். தி கில்டி ஒன். டிசம்பர் 5 முதல் ஸ்ட்ரீமிங்குக்கு வர உள்ள இந்த தொடரில் முக்கிய பாத்திரத்தில் பசுபதி நடித்திருக்கிறார்.


