முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாமில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 2 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

திஸ்பூர் : அசாமில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி  20 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர். 

பாரக்  பள்ளத்தாக்கில் 3 மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். கரிம்கஞ்ச் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 6 பேரும், சச்சார் மற்றும் ஹைலகண்டி மாவட்டங்களில் தலா 7 பேரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். இந்த மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று காலையிலும் மழை வெளுத்து வாங்கியது.

இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் நல்பாரி,கோல்பாரா, நாகன் மற்றும் ஹொஜை  ஆகிய மாவட்டங்களில் உள்ள 350 கிராமங்கள் வெள்ளப்பெருக்கில் சிக்கி 9 பேர் மரணம் அடைந்துள்ளனர். மழை மற்றும் வெள்ளத்தால் 2,678 ஹெக்டரில் விளைப் பொருட்கள் நாசமாகி விட்டன. 44, 331 கால்நடைகள், 9,350 கோழி பண்ணைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெரும் நஷ்டத்தை எதிர்கொள்ளும் நிலை ஆளாகி உள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து