முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைதிபடுத்த போராட்டக்காரர்கள் முன் மண்டியிடும் அமெரிக்க போலீசார்

புதன்கிழமை, 3 ஜூன் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவில் போராட்டக்காரர்களை அமைதிபடுத்த அவர்கள் முன் போலீசார் மண்டியிட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் மின்னசோட்டா மாகாணத்தின் தலைநகரான மினியாபொலிசில் கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்பவர் போலீஸ் அதிகாரிகளின் பிடியில் கடந்த மாதம் 25-ம் தேதி கொல்லப்பட்ட சம்பவம், பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் கருப்பர் இன மக்கள் திரண்டு வந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

போராட்டக்காரர்களுக்கும், கலவர தடுப்பு போலீசாருக்கும் இடையே நியுயார்க், சிகாகோ, பிலடெல்பியா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களில் மோதல்கள் நடைபெற்றன. போராட்டக்காரர்களை போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளையும், ரப்பர் தோட்டாக்களையும் வெடித்து விரட்டியடித்தனர். 40 நகரங்களில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் மக்கள் வீடுகளை விட்டு வெளியே கூடி வந்து போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். 

அமெரிக்காவில் கருப்பின நபரின் மரணத்தில் ஆங்காங்கே போராட்டம் வெடித்து வரும் நிலையில், போலீசார் போராட்டக்காரர்கள் முன்பு மண்டியிட்டது மட்டுமின்றி, அவர்களை அரவணைத்தது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் மற்றும் போராட்டக்காரர்களுக்கிடையே பல இடங்களில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இதற்கிடையில் போலீஸ் அதிகாரிகள் சிலர் போராட்டக்காரர்களை கட்டிப்பிடித்து அரவணைப்பதன் மூலமும், அவர்களுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்வதன் மூலமும், துக்கத்தில் கலந்து கொள்வதன் மூலம் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளனர். அது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

ஜார்ஜியாவின் அட்லாண்டாவில், கடந்த திங்கட் கிழமை நூற்றாண்டு ஒலிம்பிக் பூங்கா அருகே நடந்த போராட்டத்தின் போது கேடயங்களை வைத்திருந்த போலீஸ் அதிகாரிகள் ஆர்ப்பாட்டக்காரர்களின் முன் மண்டியிட்டனர். அதே போன்று டென்வர் காவல்துறைத் தலைவர் பவுல் பாசன் அதே நாளில் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சேர்ந்து காணப்பட்டார். மற்றொரு புகைப்படத்தில், கேஸ் மாஸ்க், ஹெல்மெட் மற்றும் உடுப்பு அணிந்த ஒரு போலீஸ்  அதிகாரி தெற்கு நகரில் நடந்த ஆர்ப்பாட்டங்களின் நான்காவது நாளின் போது ஒரு ஆர்ப்பாட்டக்காரரை அரவணைத்துக் கொண்டிருப்பதைக் காண முடிந்தது.

நியூயார்க்கில், நியூயார்க் நகர காவல்துறைத் துறைத் தலைவர் டெரன்ஸ் மோனஹான் திங்களன்று தனது நகரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு ஆர்ப்பாட்டக்காரரைத் கட்டி தழுவினார். அவர்களுடன் மண்டியிட்டார். மேற்கு கடற்கரையில், லாஸ் ஏஞ்சல்ஸின் வான் நியூஸ் பகுதியில் நடந்த போராட்டத்தின் போது எதிர்ப்பாளர் கெவின் வெல்பெக் கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்து அதிகாரியுடன் கைகுலுக்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து