முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா, சீன ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சு நிறைவு

சனிக்கிழமை, 6 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : லடாக் எல்லையில் நிலவும் பதற்றம் தொடர்பாக இந்தியா, சீனா ராணுவ உயர் அதிகாரிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை நிறைவுபெற்றது.

இந்தியா - சீனா இடையிலான 3 ஆயிரத்து 488 கி.மீ. நீள எல்லையில் பல்வேறு இடங்களில் எல்லை பிரச்சனை நிலவி வருகிறது. கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இரு தரப்பு ராணுத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பதற்றம் நிலவி வருகிறது. இரு நாட்டு ராணுவத்தினரும் படைகளை குவித்தன. இதையடுத்து சிக்கலுக்கு தீர்வு காண கடந்த 2-ம் தேதி, மேஜர் ஜெனரல் அந்தஸ்துள்ள அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, லெப்டினன்ட் ஜெனரல் நிலையிலான அதிகாரிகளிடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டின் சீன பகுதியான மோல்டோ என்ற இடத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தியா தரப்பில் 14- வது படைப்பிரிவு  கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங், சீனா தரப்பில் தெற்கு ஜின்சியாங் ராணுவ பிரிவு கமாண்டர் லின் லியூ ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையின் முடிவில் கல்வான் பள்ளதாக்கு பகுதியிலிருந்து சீன ராணுவத்தை சேர்ந்தவர்கள் பின்வாங்குவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.   சீன படைகளின் பின்வாங்குதல் நடவடிக்கையை தொடர்ந்து லடாக் எல்லை பகுதியில் பதற்றம் படிப்படியாக தணியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து