Idhayam Matrimony

சுந்தர்ராஜன் எம்.எல்.ஏ. மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 7 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தே.மு.தி.க. முன்னாள் எம்.எல்.ஏ.வும், விஜயகாந்தின் நண்பருமான சுந்தர்ராஜன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் நெருங்கிய நண்பராக இருந்தவர் சுந்தரராஜன். தே.மு.தி.க.வின் பொருளாளராக பொறுப்பு வகித்த இவர், தே.மு.தி.க. சார்பில் 2011-ல் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், அவர் தே.மு.தி.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சுந்தரராஜன் நேற்று உயிரிழந்தார்.

இந்நிலையில் சுந்தர்ராஜன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

சுந்தர்ராஜன் உடல்நலக்குறைவால் மரணமடைந்த செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். மேலும் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து