எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இட ஒதுக்கீட்டில் வளமான பிரிவினருக்கு உள்ள நடைமுறை தொடர வேண்டும் என்றும், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கு குந்தகம் விளைவிக்கும் என்றும் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் பழங்குடியினருக்கு 7.5 விழுக்காடும், பட்டியல் பிரிவினருக்கு 15 விழுக்காடும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடும் மற்றும் பொதுப்பிரிவினருக்கு 50.5 விழுக்காடு என்ற இட ஒதுக்கீட்டு முறையை மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் அதாவது, எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற கல்வி நிறுவனங்களில் மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. ஆனால், அகில இந்திய தொகுப்பு இடங்களை நிரப்பும் போது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அரசு முறையாக பின்பற்றுவதில்லை என்ற தகவல் தெரியவந்தவுடன் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றுமாறு கோரி மத்திய அரசுக்கு கடந்த 14.3.2018 அன்று தமிழ்நாடு அரசால் கடிதம் எழுதப்பட்டது. பின் மேற்கண்ட கடிதத்திற்கு மத்திய அரசிடமிருந்து எவ்வித பதிலும் பெறப்படாததால், இக்கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி மத்திய அரசுக்கு 13.1.2020 அன்று தமிழ்நாடு அரசால் கடிதம் எழுதப்பட்டது.
அகில இந்திய தொகுப்பு இடங்களை நிரப்பும் போது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் சலோனி குமாரி மற்றும் ஒருவர் தொடர்ந்த வழக்கு (எண். 596 / 2015) நிலுவையில் உள்ளதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசும் ஒரு மனுதாரராக தன்னை சேர்த்துக் கொண்டது. இப்பொருள் தொடர்பாக கடந்த 6.6.2020 அன்று தமிழ்நாடு முதல்வரின் தலைமையில் ஒரு கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் எடுத்த முடிவின்படி அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தமிழ்நாடு அரசினால் ஒப்பளிக்கப்படும் இடங்களில், தமிழ்நாட்டில் பின்பற்றப்படுவதைப்போல், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி (பிற்படுத்தப்பட்டோர் 30 விழுக்காடு மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 20 விழுக்காடு) சுப்ரீம் கோர்ட்டி்ல தனியாக ஒரு வழக்கு (வழக்கு எண்.552/2020 ) தொடரப்பட்டது. இவ்வழக்கினை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தனது 11.6.2020 நாளிட்ட தீர்ப்பில் இக்கோரிக்கை தொடர்பாக மனுதாரர்களை ஐகோர்ட்டினை அணுகுமாறு அறிவுறுத்தியது. இதே கோரிக்கையை வலியுறுத்தி ஐகோர்ட்டிலும் தனியாக ஒரு வழக்கு (எண் 8361/2020) கடந்த 16.6.2020 அன்று தமிழ்நாடு அரசால் தொடரப்பட்டு, 9.7.2020 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
தமிழக மாணவர்களின் நலனில் அக்கறை கொண்ட அம்மாவின் அரசு, சுப்ரீம் கோர்ட்டிலும், 50 விழுக்காடு கோரி தமிழ்நாடு அரசின் சார்பில் தனியாக மீண்டும் ஒரு வழக்கினை (எண்.13644/2020) 2.7.2020 அன்று தொடர்ந்து, மேற்படி வழக்கும் 9.7.2020 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. அம்மாவும், அவரைத் தொடர்ந்து முதல்வரும், ஏழை எளிய மாணவர்கள், குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள் மருத்துவ கல்வி பயில்வதற்கு தடையாக இருக்கும் ‘நீட்’ தேர்வினை ரத்து செய்ய வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் கூட (8.7.2020) தமிழக முதல்வர் பாரத பிரதமருக்கு தற்போதுள்ள காலகட்டத்தில் ‘நீட்’ தேர்வினை நடத்ததுவது மிகவும் கடினம் என்றும், பிளஸ் 2 தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மருத்துவ கல்விக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசு பணிகள் மற்றும் கல்வி நிலையங்களில் சேர்க்கைக்கு மத்திய அரசு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி வருகிறது. இந்த இட ஒதுக்கீடு வளமான பிரிவினருக்கு (Creamy layer) வழங்கப்படுவதில்லை. வளமான பிரிவினர் (Creamy layer) அளவு கோல்களில், பெற்றோரின் ஆண்டு வருமானம் ஒரு அளவு கோல். அதன் படி பெற்றோரின் ஆண்டு வருமானம் தற்போது 8 லட்சம் ரூபாய் உச்ச வரம்பாக உள்ளது. இந்த வருமானத்தை கணக்கிடும் போது, இதுவரை ஊதியம் (Salary) மற்றும் விவசாயம் (Agricultural)வருமான கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. தற்போது மத்திய அரசு, ஊதியம் மற்றும் விவசாய வருமானத்தை வளமான பிரிவினரை நீக்கம் செய்வதற்கான கணக்கில் எடுத்துக் கொள்ளப்போவதாக செய்திகள் வந்துள்ளன. தேசிய பிற்படுத்தப்பட்ட ஆணையமும் இதனை பரிந்துரை செய்யும் என்ற செய்திகளும் வந்துள்ளன.
தமிழ்நாட்டில் பல்லாண்டு காலமாக பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கென இடஒதுக்கீடு கொள்கை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு பணிகளில் நியமனங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் மாணவ, மாணவியர் சேர்க்கை ஆகியவற்றிற்கான இடஒதுக்கீட்டைச் செயல்படுத்தி, சமூக நீதியை காப்பதில் அம்மாவும், அம்மாவின் அரசும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டின் அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது 69 சதவீத இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. மண்டல் குழு வழக்குகளில் இட ஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்ததால், 69 சதவீத இட ஒதுக்கீட்டினை தொடர்ந்து செயல்படுத்தும் பொருட்டு, அம்மாவின் அரசு 1993-ம் ஆண்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கான சட்டத்தினை நிறைவேற்றியது. பின்னர், அரசமைப்புச் சட்டத்தின் 31பி-ன்கீழ் பாதுகாப்பு பெறும் பொருட்டு, தமிழ்நாடு சட்டம் 45 /1994, இந்திய அரசமைப்பு சட்டத்தின் ஒன்பதாவது விவர அட்டவணையில் சேர்க்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டு முறையில், கல்வி நிலையங்களில் மாணவ, மாணவியர் சேர்க்கை மற்றும் மாநில அரசின் கீழ் வரும் பணிகளில் நியமனங்கள் ஆகியவற்றில் வளமான பிரிவினரை ((Creamy layer) நீக்கம் செய்யாமல், 69 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இட ஒதுக்கீடு சமூக, கல்வி ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட வேண்டும். பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கு குந்தகத்தை விளைவிக்கும் என கருதப்படுகிறது. மேற்குறிப்பிட்ட சூழ்நிலையில் மத்திய அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) வழங்கப்படும் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டில், வருமான உச்ச வரம்பில், ஊதியம் (Salary) மற்றும் விவசாய (Agriculture) வருமானத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், தற்போது பின்பற்றப்பட்டு வரும் வளமான பிரிவினருக்கு உள்ள நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும் என்று பாரத பிரதமரை முதல்வர் கடிதம் வாயிலாக வலியுறுத்தி உள்ளார்.
அம்மாவின் அரசு சமூக நீதியை காப்பதுடன் பிற்படுத்தப்பட்ட, ஏழை எளிய மக்கள் நலனை காப்பதிலும் முன்னோடி அரசாக உள்ளது என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவர். அம்மாவின் வழியில் அம்மாவின் அரசு பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனை என்றென்றும் காக்கும் அரணாக விளங்கும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க, பரிசல் இயக்க 18-வது நாளாக தடை
12 Jul 2025ஒகேனக்கல், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையானது 18-வது நாளாக நீடிக்கிறது.
-
கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் : விசாரணையில் தகவல்
12 Jul 2025கடலூர் : கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
இந்திய அணி அதனை செய்திருக்க கூடாது: இங்கிலாந்து முன்னாள் வீரர் விமர்சனம்
12 Jul 2025லண்டன் : இந்திய அணி பந்து மாற்றத்தை தேர்வு செய்திருக்கக்கூடாது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்டீவ் ஹார்மிசன் விமர்சித்துள்ளார்.
-
துருக்கி அரசுடன் ஒப்பந்தம்: ஆயுதங்களை கீழே போட்ட குர்திஷ் பிரிவினைவாதிகள்
12 Jul 2025இஸ்தான்புல், துருக்கியுடனான சமாதான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈராக்கிய குர்திஷ் பிரிவினைவாதிகள் தங்கள் ஆயுதங்களை கைவிட தொடங்கியுள்ளனர்.
-
முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி
12 Jul 2025கடலூர், கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீராதாரமாக காட்டுமன்னார்கோவில் லால் பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.
-
இங்கிலாந்து ஜோடி சாம்பியன்
12 Jul 2025'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் மிகவும் கவுரவமிக்கதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
-
ஆர்.சி.பி. கூட்டநெரிசலுக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் : விசாரணை அறிக்கையில் தகவல்
12 Jul 2025பெங்களூரு : பெங்களூரில், ஆர்.சி.பி.
-
கடந்த 10 நாட்களில் வெப்ப அலையால் 2,300 பேர் பலி
12 Jul 2025லண்டன், ஐரோப்பியாவின் பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் வெப்ப அலை காரணமாக கடந்த 10 நாட்களில் மட்டும் 2,300 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வ
-
பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம்: விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு
12 Jul 2025மும்பை : பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம் தொடர்பாக விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு தெரிவித்துள்ளார்.
-
சிறிய பிரச்சனையை பெரிதுபடுத்த வேண்டாம்: வி.சி.க.வினருக்கு திருமாவளவன் அறிவுறுத்தல்
12 Jul 2025சென்னை, சிறிய பிரச்சனையை பெரிதுபடுத்த வேண்டாம் என்று வி.சி.க.வினருக்கு திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார்.
-
16 நிபந்தனைகளுடன் த.வெ.க. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி
12 Jul 2025சென்னை : த.வெ.க. ஆர்ப்பாட்டத்திற்கு பைக் பேரணி, பட்டாசுகளுக்கு தடை போன்ற நிபந்தனைகளுடன் காவல் துறை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
-
பாரதிய ஜனதா கூட்டணிக்கு த.வெ.க. வர வாய்ப்புள்ளதா? / மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம்
12 Jul 2025புதுடெல்லி : நாங்கள் பல கட்சிகளை ஒரே கூட்டணியில் கொண்டு வர முயற்சிக்கிறோம் என்று அமித்ஷா தெரிவித்தார்.
-
டெல்லியில் இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம்: 5 பேர் பலி
12 Jul 2025புதுடில்லி, டெல்லியில் 4 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் உயிரிழந்தனர்.
-
சீனா செல்கிறார் ஜெய்சங்கர்
12 Jul 2025புதுடெல்லி : ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனா செல்ல உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மாணவர், சுற்றுலாப் பயணிகளுக்கான அமெரிக்க விசா கட்டணம் 40 ஆயிரம் ரூபாயாக உயர்வு
12 Jul 2025நியூயார்க், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் விசா, இந்தியப் பணியாளர்கள் அதிகம் பயன்படுத்தும் எச்-1பி விசா கட்டணத்தை ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரமாக அதிகரிக்கப்
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு: ஒரு காலி பணியடத்துக்கு 353 பேர் போட்டி
12 Jul 2025சென்னை, டி.என்.பி.எஸ்.சி.
-
5 விக்கெட்டுகள் வீழ்த்தியதை கொண்டாடாதது ஏன் ? - பும்ரா விளக்கம்
12 Jul 2025லண்டன் : முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதை கொண்டாடாததற்கான காரணம் குறித்து பும்ரா விளக்கமளித்துள்ளார்.
-
விழுப்புரத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி
12 Jul 2025சென்னை : தமிழ்நாட்டில் விழுப்புரத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ சின்னம் என்ற அங்கீகாரம் கிடைத்தது பெருமகிழ்ச்சி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின
-
விழுப்புரத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி
12 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் விழுப்புரத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ சின்னம் என்ற அங்கீகாரம் கிடைத்தது பெருமகிழ்ச்சி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
லாா்ட்ஸ் டெஸ்ட்: கே.எல்.ராகுல் சதம்
12 Jul 2025லண்டன் : லாா்ட்ஸ் டெஸ்ட்டில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் சதமடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பும்ரா 5 விக்கெட்...
-
குஜராத் பால விபத்து பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு
12 Jul 2025வதோதரா, குஜராத் மாநிலத்தில் ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
-
நான் எந்த சர்ச்சையிலும் சிக்க விரும்பவில்லை : ஜஸ்ப்ரிட் பும்ரா பதில்
12 Jul 2025லண்டன் : எந்தவிதமான சர்ச்சையிலும் சிக்கி, போட்டிக்கான கட்டணத்தில் பிடித்தம் செய்யப்படுவதை விரும்பவில்லை என பும்ரா தெரிவித்துள்ளார்.
-
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: இறுதியில் சின்னர் - அல்கராஸ் மோதல்
12 Jul 2025லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் யானிக் சின்னர், இரண்டாம் இடத்தில் இருக்கும் நடப்பு சாம்பியன் அல்கராஸுக்கு இடையேயான போ
-
மக்கள் செல்வாக்கை தி.மு.க., இழந்து விட்டது: ஆட்சிக்கு வந்ததும் நிறுத்தப்பட்ட திட்டங்களை வழங்குவோம்: இ.பி.எஸ்.
12 Jul 2025கடலூர் : நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், நிறுத்தப்பட்ட ஏழை மக்களின் திட்டங்களை வழங்குவோம் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-07-2025.
13 Jul 2025