முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி : ஷானன் கேப்ரியல் ஆட்டநாயகனாக தேர்வு

திங்கட்கிழமை, 13 ஜூலை 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சவுதம்டன் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நடந்து வருகிறது. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து 204 ரன்னில் சுருண்டது. ஜாசன் ஹோல்டர் 6 விக்கெட்டுகளை அள்ளினார். 

அடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி கிரேக் பிராத்வெய்ட் (65 ரன்), ஷேன் டாவ்ரிச் (61 ரன்) ஆகியோரது அரைசதங்களின் உதவியுடன் 318 ரன்கள் சேர்த்து ‘ஆல்-அவுட்’ ஆனது. பின்னர் 114 ரன்கள் பின்தங்கிய நெருக்கடியுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி  313 ரன்களை சேர்த்தது.

இதையடுத்து 200 ரன்கள் எனும் இலக்குடன் களமிறங்கிய நிலையில், 95 ரன்கள் சேர்த்த ஜெர்மைன் பிளாக்வுட்டின் சிறப்பான ஆட்டம் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. 

தொடர்ந்து இரு இன்னிங்சிலும் சேர்த்து 8 விக்கெட்டுகள் வீழ்த்திய, மேற்கிந்திய தீவுகள் அணியின் ஷானன் கேப்ரியல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து