முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காததற்கு யார் காரணம்? -முன்னாள் வீரர் பத்ரிநாத் சொல்கிறார்

செவ்வாய்க்கிழமை, 21 ஜூலை 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : இந்திய அணியில் தனக்கு இடம் இல்லாமல் போனதற்கு இவர்கள்தான் காரணம் என முன்னாள் வீரர் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்காக 2008-ம் ஆண்டு அறிமுகமானவர் சுப்ரமணியம் பத்ரிநாத். இவர் தமிழகத்திலிருந்து இந்திய அணிக்கு தேர்வான மிகச் சிறந்த பேட்ஸ்மேன். தமிழக அணிக்காக பத்தாயிரம் ரன்களுக்கு மேல் குவித்து இந்திய அணியில் இடம் பிடித்தார்.  இவர் இந்திய அணியில் அறிமுகமானபோது சச்சின் டெண்டுல்கர், லட்சுமணன், ராகுல் டிராவிட், விரேந்தர் செவாக் , கௌதம் கம்பீர். யுவராஜ் சிங். மகேந்திரசிங் தோனி என பேட்ஸ்மேன்கள் நிறைந்திருந்தனர்.

இருந்தாலும் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.  கொடுத்த வாய்ப்பினையும் சரியாக பயன்படுத்திக் கொண்டார். ஒரே ஒரு டி20 போட்டியில் 43 ரன்கள் எடுத்தார் . டெஸ்ட் போட்டியிலும் தனது அறிமுக போட்டியில் ஆடி அரைசதம் கடந்தார். அதன் பின்னர் அணியில் இடம் கிடைக்காததற்கு என்ன காரணம் என்று கூறியுள்ளார் சுப்ரமணியம் பத்ரிநாத். அவர் கூறுகையில்..

என்னால் என்ன செய்ய முடியுமோ அனைத்தையும் செய்தேன். ஆனால் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் பலம் வாய்ந்ததாக இருந்தது. அந்த அணியில் ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், லட்சுமணன், சேவாக், கௌதம் கம்பீர் யுவராஜ் சிங், மகேந்திரசிங் டோனி என பலர் இருந்தனர். ஆல் ரவுண்டராக இருந்திருந்தால் 6ஆவது அல்லது 7 ஆவது பேட்ஸ்மேனாக களமிறங்க வாய்ப்பு இருந்திருக்கும்,

அணியின் மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராகவும் இருந்திருப்பேன். என்னால் அணியில் இருந்த வரை என்னுடைய பங்களிப்பை முடிந்தளவுக்கு செய்தேன்.  அவர்களை உடைத்து விட்டு என்னால் செல்ல முடியவில்லை. சுழல் பந்து வீசும் திறமையும் கற்றேன். ஆனால் எனக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார் சுப்ரமணியம் பத்ரிநாத்.

தமிழக அணிக்காக 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்த பத்ரிநாத். ஐ.பி.எல். போட்டிகளுக்காக சி.எஸ்.கே. அணியிலும் விளையாடி இருக்கிறார். சிஎஸ்கே அணிக்காக 95 போட்டிகளில் 1441 ரன்களை குவித்த பத்ரிநாத்தின் சராசரி 30.65. டி20 போட்டிகளுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என நிராகரிக்கப்பட்ட பத்ரிநாத், ஐபிஎல் டி20 தொடரில் சிஎஸ்கேவுக்காக விளாசியது குறிப்பிடத்தக்கது. 2008-ம் ஆண்டு இவருக்கு பதிலாக தான் விராட் கோலி அணியில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து