கொரோனாவுக்கு பின் சீனா மீதான அமெரிக்காவின் அணுகுமுறை பெரிதும் மாறிவிட்டது: டிரம்ப்

வியாழக்கிழமை, 6 ஆகஸ்ட் 2020      உலகம்
Trump 2020 07 29

கொரோனா வைரசுக்கு பின் சீனா மீதான அமெரிக்காவின் அணுகுமுறை பெரிதும் மாறி விட்டது என்று அதிபர் டிரம்ப் கூறி உள்ளார்.

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கொரோனா வைரஸ் தீரா பகையை உருவாக்கியுள்ளது. கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதாகவும், அதை சீனா வேண்டுமென்றே பிற நாடுகளுக்கு பரப்பி விட்டதாகவும் அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரசுக்கு பிறகு சீனாவின் மீதான அமெரிக்காவின் அணுகுமுறை பெரிதும் மாறி இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கொரோனா வைரஸ் நோய் தாக்கியதில் இருந்து சீனா மீதான நமது அணுகுமுறை பெரிதும் மாறி விட்டது என்று நினைக்கிறேன். கொரோனா வைரசை அவர்களால் தடுத்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. எனவே நாங்கள் வித்தியாசமாக உணர்கிறோம் என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து