Idhayam Matrimony

தமிழக மக்களுக்கு தொடர்ந்து உழைக்க திராவிட மாடல் அரசுக்கு ஆதரவு தர வேண்டும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவு

செவ்வாய்க்கிழமை, 30 டிசம்பர் 2025      தமிழகம்
Udayanidhi-1 2024-11-17

சென்னை, தமிழக மக்களுக்கு தொடர்ந்து உழைக்க திராவிட மாடல் அரசுக்கு ஆதரவு தர வேண்டும் என்று கோவையில் 11 ஆயிரம் பேருக்கு நலத்திட்டங்களை வழங்கிய நிலையில் துணை முதல்வர் உதயநிதி பதிவிட்டுள்ளார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு 'எல்லோருக்கும் எல்லாம்' என்கிற உயரிய தத்துவத்துடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், கோவையில் (நேற்று) நடைபெற்ற மாபெரும் அரசு விழாவில் சுமார் 11 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.137 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினோம்.

குறிப்பாக, 1,500 மகளிர் சுய உதவிக்குழு சகோதரிகளுக்கு வங்கி கடன் இணைப்புகள் - 1,500 பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் - 211 மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளுக்கு இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்டுள்ள ஸ்கூட்டர்கள் வாகனம் மற்றும் செவித்திறன் கருவிகள் - கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஆணைகள் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வாழ்த்தினோம்.

இந்த நிகழ்வின் போது, ரூ.163 கோடி மதிப்பில் பணி நிறைவுபெற்ற திட்டங்களை திறந்து வைத்து, ரூ.32 கோடி மதிப்பிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினோம். தமிழ்நாட்டின் மக்களுக்கு தொடர்ந்து உழைத்திட, திராவிட மாடல் அரசு 2.O அமைந்திட ஆதரவு தர வேண்டும்.என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து