Idhayam Matrimony

பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி சந்திப்பு பட்ஜெட் குறித்து ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 30 டிசம்பர் 2025      இந்தியா
CM-1-2025-12-30

புதுடெல்லி, பட்ஜெட் குறித்து கருத்துகளை கேட்டறிய புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.

2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அரசியலில் நிலவும் நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரி உள்ளிட்ட சூழல்களுக்கு மத்தியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில், மத்திய பட்ஜெட் குறித்து கருத்துகளைக் கேட்பதற்காக, புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களை பிரதமர் மோடி நேற்று சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன், நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி, நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமணியம் மற்றும் நிதி ஆயோக் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கருத்துக்களை கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து