எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம்பெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
டெல்லியில் ஆண்டுதோறும் ஜனவரி 26-ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில், முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். இதில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள், பல்வேறு துறைகள் மற்றும் துணை ராணுவத்தின் அலங்கார ஊர்திகள் இடம்பெறும். அந்தவகையில் 2026 ஜனவரி 26-ம் தேதி, டெல்லியில் உள்ள கடமை பாதையில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுக்க உள்ளன.
இந்த நிலையில், 2026 குடியரசு தின விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம்பெற மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ‘பசுமை மின் சக்தி’ என்ற தலைப்பில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு குடியரசு தின விழா அலங்கார ஊர்திகளில் தமிழ்நாடு பங்கேற்க மத்திய அரசு அனுமதி மறுத்தது. இதற்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


