தங்கம் விலை சவரனுக்கு ரூ. 288 குறைந்தது

சனிக்கிழமை, 8 ஆகஸ்ட் 2020      தமிழகம்
gold jewelry 2020 08 03

Source: provided

சென்னை : தங்கத்தின் விலை நேற்று ஒரு சவரனுக்கு ரூ.288 குறைந்து 5,380 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக சர்வதேச பொருளாதார சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை 22-ம் தேதி ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.38 ஆயிரமாக இருந்தது.

அதனை தொடர்ந்து தங்கத்தின் விலை படிப்படியாக உயர்ந்து ஜூலை 31-ம் தேதி ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை 41 ஆயிரம் ரூபாயைக் கடந்தது. மேலும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்த நிலையிலேயே உள்ளது. 

 

இவ்வாறு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தங்கத்தின் விலை நேற்று குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்து ரூ.43,040-க்கு விற்பனையானது.  ஒரு கிராம் தங்கம் ரூ.36 குறைந்து 5,380 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து