முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனாவில் இருந்து விரைவாக விடுபட அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும்: சுகாதார அமைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 9 ஆகஸ்ட் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

ஜெனீவா : கொரோனாவில் இருந்து விரைவாக விடுபட வேண்டும் என்றால், அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உலகின் பல்வேறு நாடுகள் கொரோனாவிற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இது குறித்து ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள அந்த அமைப்பின் தலைமையகத்தில், காணொலி காட்சி மூலம் அதன் தலைவா் டெட்ரோஸ் அதனோம் கூறியதாவது;- 

கொரோனா தடுப்பு மருந்து விவகாரத்தில் தேசியவாதத்தை காட்டுவது மிகவும் தவறானதாகும். அத்தகைய சுயநலத்தால் யாருக்கும் நன்மை ஏற்படாது. கொரோனா நோய்த்தொற்றின் பிடியிலிருந்து உலகம் விரைவாக விடுபட வேண்டும் என்றால், அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும். காரணம், இது உலகமய காலக்கட்டம். தற்போதெல்லாம் அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது.

இத்தகைய சூழலில், உலகின் மற்ற நாடுகளில் கொரோனா நோய்த்தொற்று பரவிக் கொண்டிருந்தாலும், தங்கள் நாட்டுக்கு மட்டும் கொரோனாவிலிருந்து பாதுகாப்பு பெற்று விடலாம் என்று நினைப்பது மிகவும் தவறு என்று அவா் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து