வசந்தகுமார் எம்.பி.க்கு கொரோனா தொற்று உறுதி: சென்னை அப்பல்லோவில் அனுமதி

செவ்வாய்க்கிழமை, 11 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Vasantha Kumar 2020 07 29

Source: provided

சென்னை : கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

கொரொனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் சென்னையில் பல்வேறு பகுதியில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்த வசந்தகுமார், சமீப நாட்களாக சென்னையில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து