முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா சிகிச்சைக்கு உதவும் குறைந்த விலை ரெம்டெசிவிர் மருந்தை அறிமுகப்படுத்திய இந்திய நிறுவனம்

வியாழக்கிழமை, 13 ஆகஸ்ட் 2020      இந்தியா
Image Unavailable

குறைந்த விலையில் ரெம்டெசிவிர் மருந்தை இந்தியாவின் முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனமான ஜைடஸ் கடிலா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கொரோனா சிகிச்சைக்கு உதவும் ரெம்டெசிவர் ஆண்டிபாடி (நோய் எதிர்ப்பு) மருந்தை இந்தியாவின் முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனமான ஜைடஸ் கடிலா தயாரித்துள்ளது. 100 எம்.ஜி. ரெம்டெசிவர் மருந்தின் விலை ரூ 2,800- ($37.44) என்று  நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக ஜைடஸ் கடிலா தெரிவித்துள்ளது.  ரெம்டெக் என்ற பிராண்ட் பெயரில் மருந்து விற்பனை செய்யப்படும் எனவும்  கொரோனா சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இந்த மருந்தினை பெறலாம் என்று  ஜைடஸ் கடிலா அறிவித்துள்ளது. ஆண்டி வைரல் மருந்தான ரெம்டெசிவரை இந்தியாவில் நகல்( Copy) செய்து அறிமுகப்படுத்தும் ஐந்தாவது நிறுவனம் ஜைடஸ் கடிலா ஆகும். 

ஹெபடைடிஸ் சி’ வைரஸை அழிக்க அமெரிக்காவை சேர்ந்த கிளியட் சயின்சஸ் நிறுவனம் கடந்த 2009-ம் ஆண்டில் ரெம்டெசிவிர் மருந்தை கண்டுபிடித்தது.  தற்போது கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கும் ரெம்டெசிவிர் மருந்து நல்ல பலன் அளிப்பது தெரியவந்துள்ளது. இந்த மருந்தை, கொரோனா வைரஸ் அவசர சிகிச்சைக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு அனுமதி அளித்துள்ளது.  இதேபோல இந்தியாவில் அவசர சிகிச்சை தேவைப்படும் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்தை வழங்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்  அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து கிளியட் சயின்சஸ் நிறுவனத்திடம் உரிய அனுமதி பெற்று 5 இந்திய நிறுவனங்கள் , ரெம்டெசிவிர் மருந்தை உற்பத்தி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து