முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க 4 முதல் 5 ஆண்டுகள் ஆகும் : சீரம் நிறுவன தலைமை அதிகாரி தகவல்

செவ்வாய்க்கிழமை, 15 செப்டம்பர் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

லண்டன் : உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தின்  தலைமை நிர்வாகி, உலகில் உள்ள அனைவருக்கும் 2024-ம் ஆண்டின் இறுதி வரை தடுப்பூசி போடுவதற்கு போதுமான கொரோனா தடுப்பூசிகள் கிடைக்காது என்று எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாகி ஆதார் பூனவல்லா கூறியதாவது:-

மருந்து நிறுவனங்கள் உற்பத்தி திறனை இன்னும் அதிகரிக்கவில்லை. இது உலக மக்களுக்கு குறைந்த நேரத்தில் தடுப்பூசி போடுவதற்கு போதுமானதாக இல்லை.

கொரோனாவுக்கு  இரண்டு டோஸ் தடுப்பூசி தேவை என்றால் உலகம் முழுவதும் 1,500 கோடி தேவைப்படும். 35 தடுப்பூசிகள் சோதனை நிலையின் இறுதிக்கட்டத்தில் உள்ளன. உலகில்  அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும்.

கொரோனா பாதிப்பு தடுப்பூசி உற்பத்தியாளர்களின் திறனை விட அதிகமாக உள்ளது. கொரோனா தடுப்பூசிக்காக  உலகம் நம்பிக்கையுடன் இருக்கிறது என்று எனக்குத் தெரியும்.

ஆனால் இப்போது தடுப்பூசி இறுதிக்கு அருகில் யாரும் வருவதை நான் கேள்விப்பட்டதில்லை. மேற்கு இந்திய நகரமான புனேவை மையமாகக் கொண்டு செயல்படும் சீரம் நிறுவனம், கொரோனா தடுப்பூசியை உருவாக்க அஸ்ட்ராஜெனெகா மற்றும் நோவாவாக்ஸ் உள்ளிட்ட ஐந்து சர்வதேச மருந்து நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து 100 கோடி டோஸ் அளவை உற்பத்தி செய்ய உறுதிபூண்டுள்ளது. அதில் பாதி இந்தியாவுக்கு அளிக்க உறுதியளித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து