Idhayam Matrimony

தேசிய கொடியை அவமதித்த வழக்கு: நடிகர் எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்

புதன்கிழமை, 16 செப்டம்பர் 2020      சினிமா
Image Unavailable

Source: provided

சென்னை : தேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

நடிகரும், பா.ஜ.க. நிர்வாகியுமான எஸ்.வி.சேகர், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளிக்கும் வகையில் பேசியிருந்த வீடியோவில் அவர் தேசியக் கொடியை அவமதித்து விட்டதாகவும், தமிழக முதல்வர் பெயருக்கு களங்கம் விளைப்பதாகவும் கூறி அவர் மீது சென்னை காவல் ஆணைய அலுவலகத்தில் ராஜரத்தினம் என்பவர் புகார் அளித்தார். 

இதனையடுத்து எஸ்.வி சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார், தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டம் உட்பட 2 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு ஐகோர்ட்டில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. 

அப்பொழுது தேசிய கொடியை அவமதித்த வழக்கில் எஸ்.வி.சேகரின் மன்னிப்பை ஏற்பதாக சென்னை காவல்துறை சென்னை ஐகோர்ட்டில் தகவல் தெரிவித்தது.

இதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற விசாரணையில், சென்னை ஐகோர்ட் எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது. மேலும் தேவைப்படும்போது காவல்துறை முன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சென்னை ஐகோர்ட் நிபந்தனை விதித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து