முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொற்று இல்லை என்று உறுதியானலும், சிலருக்கு நுரையீரலில் பாதிப்பு தென்படுகிறது: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

வெள்ளிக்கிழமை, 18 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு 10 சதவிகித்திற்கும் குறைவாக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்று உறுதியானலும், சிலருக்கு நுரையிரலில் பாதிப்பு தென்படுவதாகவும் அவர் தெரிவித்தார். 

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 120 படுக்கைகள் கொண்ட கொரோனா சந்தேக வார்ட்டை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்..

பின்னர் பேட்டியளித்த அவர், தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்காக 1.42 லட்சம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டிருப்பதாகவும், கொரோனாக்கு பின் ஏற்படும் உடல்நலக்குறைவு சோதனை மையத்தில் 3000பேர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்று உறுதியானலும், சிலருக்கு நுரையீரலில் பாதிப்பு தென்படுகிறது. அதற்காக தான் கொரோனா சந்தேக மையம் அமைக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுக்கான தாக்கம் 3 வாரங்களுக்கு பின் தான் தெரியவரும். தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு 10 சதவீதம் குறைவாக தான் உள்ளது. தமிழகம் நல்ல நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

மற்ற மாநிலங்களில் தொற்று அதிகரிப்பதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.  அபராதம் விதிப்பது அரசின் நோக்கம் இல்லை. வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசுகையில்,  மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் வெளியிடப்பட்ட பரிசோதனை முடிவில் நாட்டிலேயே தமிழகத்தில் தான் பரிசோதனை எண்ணிக்கை  வேறுபாடு விகிதம் குறைவாக உள்ளது.

பொது சுகாதாரத்துறையின் சார்பில் எடுக்கப்படும் பரிசோதனை குறித்த விவரங்கள் ஐ.சி.எம்.ஆர். இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதில் ஏற்படும் தாமதத்தால் எண்ணிக்கை மாறுபட்டுள்ளது என்று தெரிவித்தார்..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து