பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜ.க. எம்.பி.க்கு கொரோனா பாதிப்பு

சனிக்கிழமை, 19 செப்டம்பர் 2020      இந்தியா
Vinay-Sakasraputte 2020 09

Source: provided

புதுடெல்லி : பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்ற மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி.க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி.க்களில் ஒருவரான வினய் சகஸ்ரபுட்டே, கட்சியின் தேசிய துணைத் தலைவராகவும் உள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் முடிவு வந்ததால் பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றார்.

ஆனால் 16-ம் தேதி இரவு அவருக்கு தலைவலியுடன் லேசான காய்ச்சல் ஏற்பட்டதால் மீண்டும் பரிசோதனை செய்ததில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.  இதுபற்றி டுவிட்டரில் பதிவு செய்துள்ள அவர், 

எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் டாக்டர்களின் அறிவுரைப்படி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறவும் என்று கூறி உள்ளார். 

கடந்த புதன்கிழமையன்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்நாடக பா.ஜ.க. எம்.பி. அசோக் கஸ்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து