தேங்காய் பற்றாக்குறை குறித்து மக்களிடம் பேச தென்னை மரம் ஏறிய இலங்கை அமைச்சர்

சனிக்கிழமை, 19 செப்டம்பர் 2020      உலகம்
Arundhika-Fernando 2020 09

Source: provided

கொழும்பு : இலங்கையில் தேங்காய் பற்றாக்குறை நிலவுகிறது என்ற செய்தியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக அந்நாட்டு அமைச்சர் ஒருவர் தென்னை மரத்தில் ஏறி பேசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இலங்கையில் அமைச்சராக இருப்பவர் அருந்திகா பெர்னாண்டோ. வராகபோலா என்ற இடத்திற்கு சென்ற அவர், நாட்டில் தேங்காய் பற்றாக்குறை நிலவுகிறது என்ற செய்தியை மக்களிடம் தெரிவிப்பதற்காக தென்னை மரம் ஒன்றின் உச்சிக்கு ஏறினார். அங்கிருந்து அமைச்சர் பேசியதாவது:-

உள்ளூர் தொழிற்சாலைகளின் தேவை மற்றும் மக்களின் பயன்பாடு அதிகரிப்பு காரணமாக, இலங்கை 700 மில்லியன் தேங்காய் பற்றாக்குறை நிலவுகிறது. கிடைக்கும் வெற்று இடங்களை, தென்னை மரங்கள் நடுவதற்கு பயன்படுத்தி கொள்வோம்.

நாட்டில் அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் இந்த தென்னை துறைக்கு ஊக்கம் அளிப்போம். நாட்டில் பற்றாக்குறை காரணமாக தேங்காயின் விலை உயர்ந்துள்ளது. இதனை குறைக்க நடவடிக்கை எடுப்போம் என்று அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து