இந்தியா - இலங்கை இடையே 26-ல் இருதரப்பு உச்சி மாநாடு: வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு

புதன்கிழமை, 23 செப்டம்பர் 2020      இந்தியா
India-Sri-Lanka 2020 09 23

Source: provided

புதுடெல்லி : இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உச்சி மாநாடு வரும் 26-ம் தேதி காணொலி காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது.

இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி வரும் 26-ம் தேதி இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே உடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். இந்த தகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. 

இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை கட்டமைப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பிரதமர் பதவிக்கான தேர்தல் முடிந்த பிறகு முதன்முறையாக ராஜபக்சே இந்தியாவுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் இலங்கை பிரதமர் ராஜபக்சே இந்தியாவிற்கு வந்து சென்ற பிறகு முதன்முறையாக அதிகாரப்பூர்வமான ஆலோசனை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து