எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியா முழுவதும் பரவியுள்ளது. அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 13.21 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.69 லட்சம் பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
ஊரடங்கு தளர்வுக்கு பிறகு மக்கள் பெருமளவு வெளியே வரத் தொடங்கியதால், பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
மகாராஷ்டிராவில் கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி இல்லாத நோயாளிகளால் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இங்கிலாந்தில் இதுபோன்ற நோயாளிகள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
அதேபோல் மகாராஷ்டிராவிலும் கொரோனா அறிகுறி இல்லாத நோயாளிகள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் அரசின் உத்தரவை மீறி மக்கள் வெளியே செல்கின்றனர். மக்கள் அனைவரும் சுகாதார நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


