நான் நலமாக உள்ளேன்: துணை ஜனாதிபதி வெங்கையா தகவல்

புதன்கிழமை, 30 செப்டம்பர் 2020      இந்தியா
Venkaiah-Naidu 2020 09 30

Source: provided

புதுடெல்லி : நான் நலமாக இருக்கிறேன் என்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மருத்துவர்களின் அறிவுரையின்படி அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதனிடையே வெங்கையா நாயுடு விரைவில் குணமடைய வேண்டும் என்று மாலத்தீவு குடியரசுத் துணைத்தலைவர் பாசில் நசீம் தகவல் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள வெங்கையா நாயுடு, நான் நலமாக உள்ளேன்.

என்மீது அக்கறை கொண்டு நலம் விசாரித்தமைக்கும், தங்களது தன்னலமற்ற அக்கறைக்கும் நன்றி.  மருத்துவர்களின் அறிவுரையின்படி தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுள்ளேன்.

நான் விரைவில் நலம் பெற வேண்டும் என்று வாழ்த்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி.  இவ்வாறு வெங்கையா நாயுடு அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து