முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் சூரியிடம் ரூ. 2.70 கோடி மோசடி: தயாரிப்பாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு

வெள்ளிக்கிழமை, 9 அக்டோபர் 2020      சினிமா
Image Unavailable

Source: provided

சென்னை : நிலம் வாங்கி தருவதாக கூறி நடிகர் சூரியிடம் 2.70 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தயாரிப்பாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நகைச்சுவை நடிகர் சூரி சமீபத்தில் சென்னை காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வாலை சந்தித்து புகார் மனு அளித்திருந்தார். அதில், வீர தீர சூரன் படத்தில் நடித்ததற்காக தயாரிப்பாளர் அன்புவேல் ராஜா 40 லட்சம் ரூபாய் சம்பள பாக்கி வைத்திருந்ததாகவும், அதனை கேட்டபோது நிலம் வாங்கி தருவதாக கூறி, மேலும் பணம் பெற்று மொத்தம் 2.70 கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும் கூறியிருந்தார். 

காவல் ஆணையாளரின் உத்தரவின்பேரில் இந்த புகாரின் மீது அடையாறு போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு தயாரிப்பாளர் அன்புவேல் ராஜா, ரமேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து