ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணிக்கு தஜிகிஸ்தான் வீரர் ஒப்பந்தம்

வெள்ளிக்கிழமை, 16 அக்டோபர் 2020      விளையாட்டு
Badullo 2020 10 16

Source: provided

சென்னை : 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் அடுத்த மாதம் (நவம்பர்) தொடங்கி நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, தஜிகிஸ்தான் வீரர் 30 வயதான பதுலோ பதுல்லோவை இந்த சீசனுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

தஜிகிஸ்தான் அணிக்காக 68 போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர் இந்தியாவில் நடைபெறும் தொழில்முறை போட்டியில் பங்கேற்க இருப்பது இதுவே முதல்முறையாகும்.

சென்னையின் எப்.சி. அணிக்காக விளையாட இருப்பது குறித்து பதுலோ கருத்து தெரிவிக்கையில், ‘சென்னையின் எப்.சி. அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கிறது என்றதும் யோசிக்காமல் ஒப்பந்தம் செய்து விட்டேன்.

சக வீரர்களை சந்திக்க ஆவலாக இருக்கிறேன். சென்னையின் எப்.சி. அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பேன் என்று நம்புகிறேன்’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து