பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை அணுகிய சூதாட்ட தரகர்

வெள்ளிக்கிழமை, 16 அக்டோபர் 2020      விளையாட்டு
Pakistan 2020 10 16

Source: provided

லாகூர் : தேசிய 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் விளையாடும் வீரரை சூதாட்ட தரகர் ஒருவர் அணுகி சூதாட்டத்தில் ஈடுபட ஆசை வார்த்தை கூறியிருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து அந்த வீரர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு இயக்குனர் ஆசிப் முகமதுவிடம் புகார் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து