தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,464 குறைந்தது

சனிக்கிழமை, 17 அக்டோபர் 2020      தமிழகம்
Gold-price 2020-10-17

Source: provided

சென்னை : ஒரு சவரன் தங்கம் நேற்று ரூ.37,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

தங்கம் விலையில் கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கம் காணப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் பொருளாதார நிலையில் ஏற்ற, இறக்கம் ஆகியவற்றுக்கு ஏற்ப தங்கத்தின் விலை சந்தையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. 

அதன்படி சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,464 குறைந்து, சவரன் ரூ.37,440-க்கு விற்கப்பட்டது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சற்று குறைந்து வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது. 

அதே சமயம் ஒரு கிராம் தங்கத்தின் விலை 183 ரூபாய் குறைந்து, ரூ.4,680-க்கு விற்பனை செய்யப்பட்டது.  ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று முன்தின விலையில் இருந்து 400 ரூபாய் குறைந்து, ரூ.65,400-க்கு விற்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து