முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி

புதன்கிழமை, 21 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார். 

சென்னை எழிலகத்தில் நேற்று வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஒவ்வொருஆண்டும் எதிர்கொள்ளும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் கடந்த 12ம் தேதி தலைமை செயலாளர் உள்பட அனைத்து துறை செயலாளர் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. 

வெள்ளம் வருமுன்பு, வந்த பின், வெள்ளம் வடிந்த பின்னர் ஆகிய 3 நிலைகளில் என்னென்ன நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட கலெக்டர்களுக்கு முதலமைச்சர் அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

1076 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தமிழக கடற்கரை, இந்தியா அளவில் 18 சதவீதம் கடலோர பகுதியை தமிழகம் கொண்டுள்ளது. சூறாவளி, வறட்சி, புயல் என ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து வருகிறோம். 

அதே போன்று நிலச்சரிவு, கடல் அலை, கடல் அரிப்பு, இடி, மின்னல் என பருவமழை காலங்களில் நடைபெறும் நிகழ்வுகளை கடந்த 30 ஆண்டுகால பேரிடர் கால அனுபவங்களை கொண்டு அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.

தமிழ்நாட்டிற்கு வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிகப்படியான மழை கிடைக்கப்பெறுகிறது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து, இதன் மூலம் 47.32 சதவீதம் மழை அளவு கிடைக்கிறது. 

இந்த மழையை சேமித்து வைத்து குடிநீர் மற்றும் விவசாயம் போன்ற பணிகளுக்கு நாம் பயன்படுத்தி வருகிறோம். அந்த வகையில் தமிழகத்தில் குடிமாமரத்து பணிகள்மூலம் பணிகள்மேற்கொள்ளப்பட்டு, மழைநீரை சேமித்து வைக்க ஆய்த்தமாக உள்ளோம். 

தமிழகத்தில் உள்ள ஆணைகள்,ஏரிகள் எனஅனைத்து நீர்நிலைகளையும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில், மாநிலத்தில் மொத்தம் 4133 பகுதிகள் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ளன.அதில் 321 பகுதிகள் மிகவும் அதிகம் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் எனவும், 797 பகுதிகள் அதிகம் பாதிப்பிற்குள்ளாகும் பகுதி எனவும், 1096 பகுதிகள் மிதமான பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் எனவும், 1919 பகுதிகள் குறைவாக பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. 

பாதிப்பிற்குள்ளாகும் ஊரக மற்றும் நகர்புற பகுதிகளுக்கு முறையே குறுவட்ட மற்றும் வார்டு அளவில், பாதிப்பின் தன்மை குறித்தஆய்வு, பேரிடர் காலத்தில் காத்துக் கொள்ள வெளியேறும் வழி மற்றும் நிவாரணமையங்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய வரைபடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. 

பேரிடர் குறித்து முன்னெச்சரிக்கை அளித்திடவும், தேடுதல், மீட்பு, பாதிப்பிற்குள்ளாகும் பருதிகளில் இருந்து மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில்தங்க வைக்கவும், நிவாரண முகாம்களை நிர்வாகிக்கவும்662 பல்துறை மண்டலக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

சட்டமன்ற பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்தப்படி. 1000 காவலர்களைக் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினரிடம் பயிற்சி பெற்ற 5,505 காவலர்கள் அனைத்துமாவட்டங்களிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி, ஊர்க்காவல் படையினைச் சார்ந்த 691 நபர்களும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினரால் பயிற்சி அளிக்கப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். 

4,699 தீயணைப்பு வீரர்கள், 9859 பாதுகாக்கும் தன்னார்வலர்களும் பயிற்சிஅளிக்கப்பட்டுள்ளது. மேலும் 3,094 கல்விநிறுவனங்கள், 2,561 தொழிற்சாலைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளது. 

பேரிடர் காலங்களில் உடனடியாக செயலாற்றிட 43,409 முதல் நிலை மீட்பாளர்கள் தயார்நிலையில் உள்ளனர். இவர்களில் 14,232 மகளிர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் கால்நடைகளை பாதுகாக்க கூடுதலாக 8,871 முதல் நிலை மீட்பாளர்கள் தயார்நிலையில் உள்ளனர். 

பேரிடர் காலங்களில் பலத்த காற்றினால் விழும் மரங்களை வெட்டி அகற்றுவதற்காகவும், பேரிடர் அல்லாத காலங்களில் மரங்களை நடவதற்கும் 9,909 முதல்நிலை மீட்பாளர்கள் தயாராக உள்ளனர். அதுமட்டுமின்றி பாம்பு பிடிக்கும் திறன்உடையவர்கள், நீரில் மூழ்குபவர்களை காப்பாற்ற நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். 

மாவட்டங்களில் 3915 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 2897 ஜேசிபி இயந்திரங்கள், 2115 ஜெனரோட்டர்கள் மற்றும் 483 அதிக திறன்கொண்ட பம்பு செட்கள், தேடல் மற்றும் மீட்பு உபகரணங்கள் தயார்நிலையில் உள்ளன. 

தற்போது முன்னெச்சரிக்கையாக மழை மற்றும் வெள்ளம் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் மக்களைமாற்றுஇடங்களில் தங்க வைக்கும் பொருட்டு 121 பல்நோக்கு பாதுகாப்புமையங்கள் உட்பட 4713 தங்கும் மையங்களில் 7,39,450 நபர்களை தங்க வைக்க தயார் நிலையில் உள்ளனர். 

மேலும் கொரோனா நோய் தொற்று காரணமாக சமூக இடைவெளி கடைபிடிக்கவும், முககவசம், கைகளை சுத்தம் செய்வது போன்ற பாதுகாப்பு மையங்களில் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி பள்ளிகள், திருமணமண்டபங்கள் மற்றும்சமுதாய கூடங்கள் என 4680 தங்கும் இடங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

எதிர்வரும் வடகிழக்கு பருவமழை மற்றும் புயல், சூறாவளி காலத்தில் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல்வேறு அறிவுரைகள்அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கடந்த 26.8.2020 அன்றுஅனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதே போன்று மின்னல் தாக்கத்தின்போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை ஆகியவற்றை உள்ளடக்கிய 2020 செயல்திட்டம் கடந்த 1.9.2020 அன்று மாவட்ட கலெக்டர்களுக்குஅனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கைநடவடிக்கை பணிகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர், அனுபவமிக்க ஐஏஎஸ் அதிகாரிகள்கொண்ட குழு மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 15 மண்டலங்களுக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு பருவமழை காலங்களில் மக்கள் ஒத்துழைப்பு, விழிப்புணர்வு மிக அவசியம், நீர் திறந்துவிடும் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில்உள்ள மக்கள் எச்சரிக்கையாக முகாம் தங்கி கொள்ள வேண்டும். மேலும் பழைய வீடுகளில் உள்ளவர்கள்தங்களது வீடுகளின்உறுதி தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும். 

தற்போது கொரோனா காலகட்டம் என்பதால்மிகுந்தமுன்னெச்சரிக்கையுடன் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தங்கும்மையங்களில் அரசினவழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி குறைந்தஅளவு மட்டுமே நபர்களை தங்கவைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கழிவறைகள், மருத்துவ முகாம்கள், தங்கும் மையங்கள் ஆகியவை கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது. 

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளஅனைத்து வகையிலும் தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது .இவ்வாறு அவர்கூறினார்,.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து