முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தடுப்பூசி போன்றது முகக்கவசம் : டெல்லி சுகாதார துறை அமைச்சர் சொல்கிறார்

வெள்ளிக்கிழமை, 30 அக்டோபர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : முகக்கவசம் கொரோனா தடுப்பூசி போன்றது என்றும்  ஊரடங்கை அமல்படுத்தினாலும் கொரோனா பாதிப்பு குறையாது என்றும் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்தார். 

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால், சில மாநிலங்களில் மட்டும் தொற்று பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக டெல்லியில் கடந்த சில தினங்களாக தினம் தினம் கொரோனா தொற்று உச்சம் தொட்டு வருகிறது. 

தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. டெல்லியில் நேற்று முன்தினம் ஒருநாளில் மட்டும்   5,739- பேருக்கு தொற்று உறுதியானது. இந்த நிலையில், டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா நோயாளிகளை விரைவாகக் கண்டறிதல், பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தியது  போன்ற தீவிர நடவடிக்கையால் டெல்லியில் தற்போது கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை, பொதுமக்கள் அனைவரும் முகக்கவசத்தையே தடுப்பூசியாக கருத வேண்டும்.

நீங்கள் முகக்கவசம் அணிந்தால், உங்களை காற்று மாசில் இருந்தும், கொரோனா தொற்றில் இருந்தும் அது காக்கும். ஊரடங்கை அமல்படுத்தினாலும் கொரோனா பாதிப்பு குறையாது. ஆனால், 100 சதவீத மக்களும் முகக்கவசம் அணிந்தால்தான் கொரோனா பாதிப்பு குறையும். பொதுமுடக்கத்துக்கு இணையாக முகக்கவசம் நல்ல பலனை அளிக்கும் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து