விராட் கோலி சந்ததியை நாங்கள் ஆஸ்திரேலியராக கருத முடியும்: ஆலன் பார்டர் சொல்கிறார்

வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2020      விளையாட்டு
Alan-Border 2020 11 08

Source: provided

புதுடெல்லி : விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மா ஆஸ்திரேலியாவில் குழந்தை பெற்றால், அவரது சந்ததியை ஆஸ்திரேலியராக கருத முடியும் என நகைச்சுவையாக ஆலன் பார்டர் தெரிவித்துள்ளார். 

இந்திய அணி கேப்டன் விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு அடுத்த வருடம் ஜனவரில் குழந்தை பிறக்க இருக்கிறது. இதனால் நவம்பர் 17-ம் தேதி அடிலெய்டில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு இந்தியா திரும்புகிறார். இதனால் கடைசி மூன்று டெஸ்ட் போட்டியில் விராட் கோலி கலந்து கொள்ள மாட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

விராட் கோலி இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு எனக் கருதப்படுகிறது. இந்நிலையில் ஆலன் பார்டர் ‘‘விராட் கோலி ஆஸ்திரேலியாவில் குழந்தை பிறக்க வேண்டும் என நினைத்திருப்பார் என நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அப்படிஎன்றால், நாங்கள் அவரது சந்ததியை ஆஸ்திரேலியர்கள் எனக் கருத முடியும் என்று நகைச்சுவையாக தெரிவித்தார். 

மேலும், விராட் கோலி ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடுவார் என்பது ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமான ஒன்று. இது இந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும் என நினைக்கிறேன். தற்போதை நிலையில் அவர் ஈடுசெய்ய முடியாது பேட்ஸ்மேன் மற்றும் கேப்டன். ஆஸ்திரேலியா 2-1 என தொடரை கைப்பற்றனும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து