சென்னை : வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின்கீழ் செயல்படும் அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களுக்கு 23.11.2020 முதல் அகில இந்திய தொழிற்தேர்வு நடைபெற்று வருகிறது. நிவர் புயல் காரணமாக தமிழ்நாடு அரசு 7 மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கையாக அனைத்து பொது போக்குவரத்துகளும் 24-11-2020 முதல் நிறுத்தம் செய்ய ஆணை பிறப்பித்துள்ளது.
இதன் காரணமாக மத்திய அரசு ஒப்புதலுடன் 25-11-2020 முதல் 27-11-2020 வரை நடைபெறவிருந்த அகில இந்திய தொழிற்தேர்வு தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 03-12-2020 முதல் 05-12-2020 வரை மாற்றப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.