புதுடெல்லி : பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், கொரோனா நோய் பரவலுக்கு மத்தியில் நடத்தி முடிக்கப்பட்டது. இதைப்போல குளிர்கால கூட்டத்தொடரையும் நடத்திட அனைத்து பூர்வாங்க பணிகளும் நடந்து வருகின்றன.
குளிர்கால கூட்டத்தொடரை வருகிற 21-ந் தேதி முதல் ஜனவரி 2-ந் தேதி வரை நடத்த திட்டமிட்டு இருப்பதாக அரசின் உயர்மட்ட அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பாராளுமன்ற மக்களவையின் புதிய பொதுச்செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி உத்பால்குமார் சிங் நியமிக்கப்பட்டு உள்ளார். சபாநாயகர் ஓம் பிர்லா இதுகுறித்த அறிவிப்பை நேற்று வெளியிட்டார்.
புதிய பொதுச்செயலாளர் ஏற்கனவே மக்களவை செயலகத்தில் செயலாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.