சென்னை : தேர்தலில் அனைவரிடமும் ஆதரவு கேட்கும்போது நண்பர் ரஜினியிடமும் கேட்பேன் என மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். முன்னதாக அவரது கட்சியில் பாரத் நெட் விவகாரத்தில் விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ்பாபு மக்கள் நீதி மையம் கட்சியில் இணைந்தார். கட்சியில் இணைந்த சந்தோஷ்பாபுவை பொதுச்செயலராக நியமித்தார் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.
பின்னர் கமல் கூறியதாவது: அனைவரிடமும் ஆதரவு கேட்கும் போது நண்பர் ரஜினியிடம் மட்டும் ஆதரவு கேட்காமல் இருப்போனா? ரஜினிக்கு அரசியலை விட ஆரோக்கியம் முக்கியம், அவர் நலமாக இருக்க வேண்டும். 2021 தேர்தலில் ரஜினி அரசியலுக்கு வந்தால் போட்டி போடுவேன்.
அரசியலுக்கு வரவில்லை என்றால் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன். டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அவர் கூறினார்.