முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணியில் இருக்கும்போது விபத்தில் பலியான போலீஸ்காரர் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிதி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

திங்கட்கிழமை, 7 டிசம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அரப்பாக்கம் காவல் சோதனைச் சாவடியில் பணியில் இருக்கும்போது விபத்தில் பலியான போலீஸ்காரர் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிதியும்,  குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரி காவல் நிலைய சரகம், பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலை, அரப்பாக்கம் அருகே அமைக்கப்பட்டிருந்த காவல் சோதனைச் சாவடியில், ஆற்காடு நகர் வட்ட காவல் ஆய்வாளர் தலைமையில் 6.12.2020 அன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு வேன் இரும்பு தடுப்பு மீது மோதியதில் தடுப்பின் மறுபுறம் நின்றிருந்த காவலர் அய்யனமூர்த்தி என்பவர் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

பணியின் போது உயிரிழந்த காவலர் அய்யனமூர்த்தியை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விபத்தில் காவல் ஆய்வாளர் ஆனந்தன் காயமடைந்துள்ளார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வருத்தம் அடைந்தேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்வதோடு, உயரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும் நான் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுளேன்.

பணியின் போது உயிரிழந்த அய்யனமூர்த்தியின் குடும்பத்திற்கு 15 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும் அன்னாரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப்பணி வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து