சென்னை : பிரபல டிவி நடிகை சித்ராவின் மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது தாயார் விஜயா, முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் மனு கொடுத்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனிப்பெரும் வரவேற்பை பெற்றிருந்தவர் சித்ரா. சென்னை புறநகர் நட்சத்திர ஓட்டலில் வருங்கால கணவர் ஹேம்நாத்துடன் தங்கியிருந்த போது, மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாகச் சொல்லப்பட்ட நிலையில் கணவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரிக்க வேண்டும் என்று கோரி, சித்ராவின் தாயார் விஜயா முதல்வரின் தனிப்பிரிவில் மனு கொடுத்துள்ளார்.