முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியானாவில் காதல் ஜோடி பட்டப்பகலில் சுட்டுக்கொலை

வியாழக்கிழமை, 31 டிசம்பர் 2020      இந்தியா
Image Unavailable

அரியானா மாநிலம் ரோஹ்தக் மாவட்டம் கன்ஹெலி கிராமத்தைச் சேர்ந்தவர், பூஜா ( வயது 23) பக்கேட்டா ரோஹித் (23) இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் திருமணம் செய்வது குறித்து முடிவெடுத்த வேளையில் பெண் வீட்டாருக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து இந்த ஜோடியினர் நீதிமன்றத்தில் வைத்து திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். 

இதற்காக நேற்று முன் தினம் நீதிமன்றத்திற்கு வரும் வழியில் மகர்ஷி தயானந்த் பல்கலைக்கழகத்திற்கு அருகே வந்த காதல் ஜோடியை வழிமறித்த சிலர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு உள்ளனர் இதில் படுகாயமடைந்த இருவரும் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். பலியான இளைஞருடன் வந்த அவரது சகோதரர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இது ஆணவக் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையான இளைஞரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் பூஜாவின் மாமா குல்தீப் மற்றும் உறவினர் விகாஸ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து