முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயருகிறது: விரைவில் அறிவிப்பு வெளியாகும்

செவ்வாய்க்கிழமை, 2 செப்டம்பர் 2025      இந்தியா
Central-government 2021 12-

புதுடெல்லி, ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்தின் அகவிலைப்படி, தீபாவளிக்கு முன்பாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

7-வது ஊதிய குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் அகவிலைப்படி நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது அவர்களின் அடிப்படை சம்பளத்தில் 55 சதவீதம் அகவிலைப்படியாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூலை ஆகிய 6 மாதங்களின் அடிப்படையில் இந்த அகவிலைப்படி உயர்வு இருக்கும்.

மத்திய அரசின் புள்ளியியல் துறை அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள நுகர்வு பொருட்களின் விலைவாசியை கணக்கில் கொண்டு ஒவ்வொரு மாதமும் விலைக்குறியீட்டு எண்ணை கணக்கிடுவர். அதனடிப்படையில் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி 2025 ஜனவரியில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் 55 சதவீத அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். தொழிலாளர் பணியகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2025 ஜூன் மாதத்துக்கான நுகர்வோர் விலைக்குறியீடு 145 ஆக இருந்தது.

2024-ஆம் ஆண்டின் ஜூலை மாதம் முதல் 2025 ஜூன் மாதம் வரையிலான 12 மாத சராசரி குறியீடு 143.6 ஆகும். கடந்த ஜனவரிக்கு பின் புள்ளியியல் துறை எடுத்த கணக்கீடுப்படி, விலைக்குறியீடானது ஜனவரியில் 56.3 என்று இருந்தது. பிப்ரவரியில் 56.6 என்றும், மார்ச்சில் 57.0 ஆகவும், ஏப்ரலில் 57.6 ஆகவும். மே மாதத்தில் 57.8 ஆகவும் உயர்ந்தது. ஜூனில் இது 58.17 ஆக அதிகரித்து உள்ளது. எனவே இவ்விலைக்குறியீட்டின் அடிப்படையில் 3 சதவீத விலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது.

 

இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். அதில் ஜூலை 1 முதல் கணக்கிட்டு நிலுவை தொகையாக வழங்கப்படும். ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்தின் அகவிலைப்படி, தீபாவளிக்கு முன்பாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். அவர்களுடைய சம்பளம் பெரிய அளவில் உயரும். அகவிலைப்படி அதிகரிப்புடன், பயணப்படி மற்றும் வீட்டு வாடகைப்படியும் அதிகரிக்கும். இந்த அறிவிப்பை தொடர்ந்து மாநில அரசு ஊழியர்களுக்கும் 3 அகவிலைப்படி சதவீத உயர்வை தமிழக அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து