முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனமழை காரணமாக டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்: மக்கள் அவதி

செவ்வாய்க்கிழமை, 2 செப்டம்பர் 2025      இந்தியா
Traffic

Source: provided

புதுடெல்லி : டெல்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

குருகிராமில் பெய்த கனமழையால், இரவு நேரத்தில் டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 20கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து நெரிசலில் சிக்கித் மக்கள் தவித்தனர். வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்புவோர், அவசர வேலைகள், சுப நிகழ்ச்சிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு செல்பவர்கள் என பல தரப்பட்ட மக்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டு கடும் அவதிக்கு ஆளாகினர். ஹாரன் ஒலிகள் சாலை முழுவதும் ஒலித்துக் கொண்டே இருந்தன. திருவிழாக்காலங்களில் போடப்படும் ஒளி விளக்குகளை போன்று, சாலைகள் வாகனங்களில் விளக்குகளால் நிறைந்து காணப்பட்டன. இரண்டு மணி நேரம் பெய்த மழையை கூட நகரம் தாங்காது என்றால், எங்களின் வரிப்பணம் எல்லாம் எங்கே செலவிடப்படுகிறது? என குருகிராம் மக்கள் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வெள்ள பாதிப்பு தொடர்பான வீடியோவை பகிர்ந்து, பாஜகவின் மில்லினியம் நகர நகர்ப்புற மேம்பாட்டின் மூன்று இன்ஜின் மாதிரியை காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜ்வாலா கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரத்தில் இருந்தும் கூட, குருகிராம் மக்களுக்கான சேவையை பாஜகவால் செய்ய முடியவில்லை என விமர்சித்துள்ளார்.

பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அலுவலகங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யச் சொல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. பள்ளிகளும் ஆன்லைன் வகுப்புகளை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து