முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து மொழிகளையும் மதிக்கிறவள்: கர்நாடகா முதல்வருக்கு ஜனாதிபதி முர்மு பதில்

செவ்வாய்க்கிழமை, 2 செப்டம்பர் 2025      இந்தியா
Murmu 2023-11-19

Source: provided

பெங்களூரு : கன்னடம் உள்பட அனைத்து மொழிகளையும் மதிக்கிறவள் நான் என்று ஜனாதிபதி திரெளபதி முர்மு  கூறினார்.

கர்நாடக மாநிலம் மைசூரு டவுனில் அமைந்திருக்கும் மத்திய அரசுக்கு சொந்தமான பேச்சு மற்றும் கேட்கும் திறன் மருத்துவமனையின் 60-ம் ஆண்டு வைர விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி திரெளபதி முர்மு புதுடெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மைசூரு மண்டகள்ளி விமான நிலையத்துக்கு வந்தார்.

விமான நிலையத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்முவை, கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்-மந்திரி சித்தராமையா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் ஜனாதிபதி திரெளபதி முர்மு காரில் நேராக பேச்சு மற்றும் கேட்கும் திறன் மருத்துவமனைக்கு சென்றார். அங்குள்ள அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மருத்துவமனையின் 60-ம் ஆண்டு வைர விழாவில் அவர் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார்.

முன்னதாக வரவேற்பு உரையின்போது கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா “​​உங்களுக்கு (திரெளபதி முர்மு) கன்னட மொழி தெரியுமா?" என்று சிரித்துக் கொண்டே கேட்டார். அதற்கு ஜனாதிபதி முர்முவும் சிரித்துக் கொண்டே, "இல்லை, ஆனால் நான் அதைக் கற்றுக்கொள்ள முயற்சிப்பேன்" என்று கூறினார். ஜனாதிபதி - சித்தராமையா இடையே நடந்த உரையாடல் விழாவில் சிறிது நேரம் கலகலப்பாக அமைந்தது. அதனை தொடர்ந்து பின்னர் திரெளபதி முர்மு விழாவில் பேசியதாவது:-

நான் நாட்டில் உள்ள அனைத்து மொழிகள், கலாசாரம், பண்பாடு ஆகியவற்றுக்கு ஆழ்ந்த மரியாதை கொடுப்பவள். நான் கன்னடம் கற்க ஈடுபாட்டுடன் ஆர்வமாக இருக்கிறேன். அதற்காக எனது முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன். நான் இங்கு மேடையில் வீற்றிருக்கும் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்.

கன்னட மொழி என் தாய் மொழி கிடையாது. இருப்பினும் நான் கன்னடம் உள்பட அனைத்து மொழிகளையும் மதிக்கிறவள். நாட்டில் உள்ள அனைவரும் தங்களது மொழி, கலாசாரம், பண்பாட்டை காத்திட பாடுபட வேண்டும். அதை நல்வழியில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். சிறிது, சிறிதாக நான் கன்னடம் கற்று வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து