முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து சந்திரசேகர் ராவின் மகள் கவிதா திடீர் சஸ்பெண்ட்

செவ்வாய்க்கிழமை, 2 செப்டம்பர் 2025      இந்தியா
Kavitha 2024 08 12

Source: provided

ஐதரபாத் : கவிதாவை பிஆர்எஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து அவரது தந்தையும் கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.

பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியிலிருந்து சந்திரசேகரராவின் மகள் கவிதா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சந்திரசேகரராவின் மகன் கே.டி. ராமராவ், மகள் கவிதா இடையே மோதல் நீடித்த நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.பி.ஆர்.எஸ்.-ஐ அழிக்கும் வகையில் சிலர் செயல்படுவதாக தமது அண்ணன் மீது கவிதா அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார்.

இத்தகைய சூழலில்தான் கவிதா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக குற்றம் சாட்டி பி.ஆர்.எஸ். கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு இந்த இடைநீக்கத்தை செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இந்த முறைகேட்டில் தனது தந்தை சந்திரசேகரராவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் சந்தோஷ் ராவ் மற்றும் ஹரிஷ் ராவுமே இதற்கு காரணம் என்று கவிதா பேசியிருந்தார். இதற்கு மறுநாளே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து