அப்போலோ மருத்துவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறிய ரஜினி

வெள்ளிக்கிழமை, 1 ஜனவரி 2021      சினிமா
Rajinikanth 2020 12 17

Source: provided

சென்னை : ஐதராபாத் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ரஜினிகாந்த், அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை கூறியுள்ளார்.

உடல்நிலையை கருத்தில் கொண்டு கட்சியை ஆரம்பித்து அரசியலுக்கு வரமுடியவில்லை என நடிகர் ரஜினிகாந்த் சில தினங்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டார். இது அவரது அரசியல் வருகையை எதிர்நோக்கியிருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இந்த நிலையில் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரசிகர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன் அவரது வீட்டின் முன்பு திரண்டு தொடர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.  

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தான் அனுமதிக்கப்பட்ட அப்போலோ நிர்வாகக் குழுவினருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அப்போலோ நிர்வாகம் வெளியிட்டுள்ள  அந்த வீடியோவில், 

கடவுள் அருளால் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். உங்கள் சேவை மிகவும் சிறப்பானதாக இருந்தது என்று கூறியதோடு மருத்துவர்களுக்கும் ஊழியர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைக் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.  அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைக் கூறியிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து