எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : பள்ளிகள் திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் 3-வது வாரம் முதல் மூடப்பட்டு இருக்கின்றன. 2020-21-ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி, யூ-டியூப் மூலமாக நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் 9, 10, 11, மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறப்பது பற்றி அரசு ஆலோசித்து வந்தது. பள்ளிகளை திறக்க திட்டமிட்டு, இதற்காக பெற்றோரிடம் கருத்துகளும் கேட்கப்பட்டன.
இதையடுத்து பெற்றோர் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்தது. இந்த நிலையில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 19-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு வருகிற 19-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்காக பள்ளிகளில் சுத்தம் செய்யும் பணிகள் நேற்று முன்தினம் முதல் தொடங்கின.
இந்நிலையில், பள்ளிகளுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம் கடிதம் பெற்று வரவேண்டும். தனியார் பள்ளிகள் திறப்பதற்கு முன் அனுமதி பெற வேண்டும். வகுப்பறைக்கு உள்ளே, வெளியே முகக்கவசம் அணிவது கட்டாயம். வாரத்தின் ஆறு நாட்கள் பள்ளிகள் செயல்படும். ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வரலாம். பெற்றோரின் சம்மதத்துடன் மாணவர்கள் வீட்டிலிருந்தே படிக்கலாம். மாணவர்களின் வருகையை கட்டாயப்படுத்தக் கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


