முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

80 சதவீத இந்தியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பம்: மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்

வெள்ளிக்கிழமை, 15 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : எடல்மென் டிரஸ்ட் பாரோமீட்டர் கருத்துக்கணிப்பின் படி, 80 சதவீத இந்தியர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள விரும்புவதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறினார்.

இன்று முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்குகிறது. பிரதமர் மோடி இதனை தொடங்கி வைக்கிறார். ஆக்ஸ்போர்டு - அஸ்ட்ராசெனகாவின் தடுப்பூசியை இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் சீரம் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்தடுப்பூசிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. முதலில் அவசரகால பயன்பாடுக்கும், சுகாதார பணியாளர்களுக்கு இவை செலுத்தப்படும். தடுப்பூசி செலுத்திக்கொள்வதும் தவிர்ப்பதும் அவரவர் விருப்பம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

தடுப்பூசி குறித்து அதிக ஆர்வமுள்ளவர்கள், அதற்கு நேர் எதிராக தடுப்பூசி போட்டுக் கொள்ள தயங்குபவர்கள் ஆகிய இரு தரப்பினரையும் எதிர்கொள்ள மத்திய அரசு விரிவான திட்டங்கள் வகுத்துள்ளது. இந்திய தயாரிப்பான கோவாக்சினின் 3-ம் கட்ட பரிசோதனைகள் இன்னும் நடந்து கொண்டிருப்பதால், அதற்கு அனுமதி வழங்கியிருப்பது பற்றி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. கோவாக்சினின் செயல்திறன் பலமுறை உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாக சுகாதார அமைச்சகமும், நிபுணர்களும் கூறியுள்ளனர்.

தடுப்பூசிகள் குறித்து பல கட்டுக்கதைகள் பரப்பப்படுவதாக சுகாதார அமைச்ச்ர் ஹர்ஷ்வர்தம் குறிப்பிட்டார். இந்திய தடுப்பூசிகள் வெளிநாட்டு தடுப்பூசிகளை விட செயல்திறன் குறைந்தவை, மலட்டுத்தன்மை உண்டாக்கும், ஆண்கள், பெண்களுக்கு பிற பக்கவிளைவுகளை உண்டாக்கும். உருமாறிய வைரசுக்கு இந்திய தடுப்பூசி பயனுள்ளதாக இருக்காது போன்ற கட்டுக்கதைகள் பரபரப்படுகின்றது என்று சுட்டிக்காட்டினார்.

மேலும் தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து தனியார் நிறுவனம் ஒன்று உலகின் பல்வேறு நாடுகளில் எடுத்த கருத்துக்கணிப்பு தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் இந்தியாவில் தான் அதிகபட்சமாக 80 சதவீத மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வேன் என்று கூறியுள்ளனர்.

இது மோடி அரசு மீதான நம்பிக்கை, நம் நாட்டு விஞ்ஞானிகள் மீதான நம்பிக்கை என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுக்கு அடுத்து 67 சதவீத பிரிட்டன் மக்களும், 62 சதவீத ஜெர்மன் மக்களும், 59 சதவீத அமெரிக்க மக்களும், 40 சதவீத ரஷ்ய மக்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வேன் என்று கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து