அகமதாபாத், சூரத் மெட்ரோ ரெயில் திட்ட பூமிபூஜை: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

திங்கட்கிழமை, 18 ஜனவரி 2021      இந்தியா
Modi 2020 12 14

Source: provided

புதுடெல்லி : அகமதாபாத் மெட்ரோ ரெயில் திட்ட விரிவாக்கம் மற்றும் சூரத் மெட்ரோ ரெயில் திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. பிரதமர் மோடி காணொளி வாயிலாக கலந்துகொண்டு, பூமி பூஜையை துவக்கி வைத்தார். 

அப்போது பிரதமர் பேசியதாவது:- 

அகமதாபாத் மற்றும் சூரத் நகரங்கள் இன்று மிக முக்கியமான பரிசுகளைப் பெறுகின்றன. முந்தைய அரசாங்கங்களின் அணுகுமுறைக்கும் தற்போதைய அரசாங்கத்தின் பணிகளுக்கும் இடையில் உள்ள சிறந்த உதாரணம்,

நாடு முழுவதும் மெட்ரோ ரெயில் நெட்வொர்க் விரிவாக்கம். 2014-க்கு முன்பு, 10-12 ஆண்டுகளில் 225 கி.மீ மெட்ரோ பாதை மட்டுமே செயல்படத் தொடங்கியது. கடந்த 6 ஆண்டுகளில், 450 கி.மீ க்கும் அதிகமான மெட்ரோ நெட்வொர்க் செயல்படத் தொடங்கியது. 

நாடு முழுவதும் 27 நகரங்களில் 1000 கி.மீ.க்கும் நீளமான மெட்ரோ ரெயில் பாதைக்கான பணிகள் நடைபெறுகின்றன. மெட்ரோ நெட்வொர்க் தொடர்பாக, நாட்டில் நவீன சிந்தனை இல்லாத ஒரு காலம் இருந்தது.

அப்போது மெட்ரோ கொள்கை எதுவும் இல்லை. இதன் விளைவாக, வெவ்வேறு நகரங்களில் வெவ்வேறு வகையான மெட்ரோ இருந்தது. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து