கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் சீரம் நிறுவனத்தின் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான 5 பேருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் கோவிஷீல்டு எனும் கொரோனா தடுப்பு மருந்தை சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலம் புணேவிலுள்ள இந்த நிறுவனத்தின் முதலாவது முனையத்தின் நுழைவு வாயில் பகுதியில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான தீ விபத்தால் உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த சோகமான நேரத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.