Idhayam Matrimony

உடல் நலக்குறைவால் காலமான நடிகர் ரோபோ சங்கர் உடல் தகனம்

வெள்ளிக்கிழமை, 19 செப்டம்பர் 2025      தமிழகம்
Robo-shankar-2025-09-19

சென்னை, நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 46. ரோபோ சங்கரின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரோபோ சங்கரின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகரும் எம்பியுமான கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் ரோபோ சங்கரின் மறைவு செய்தி அறிந்து அவரது உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர், நேற்று பிற்பகல் 3 மணியளவில் சென்னை வளசரவாக்கம் இல்லத்தில் இருந்து நடிகர் ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.திரைத்துறையினரின் படை சூழ, கண்ணீர் மல்க ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. 

இந்நிலையில், ரோபோ சங்கரின் உடலுக்கு வளசரவாக்கம் மின்மயானத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், ரோபோ சங்கரின் உடல் வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து