Idhayam Matrimony

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் புதின் விரும்பவில்லை; இங்கி., உளவுத்துறை தலைவர்

வெள்ளிக்கிழமை, 19 செப்டம்பர் 2025      உலகம்
Richard-Mori-2025-09-19

இஸ்தான்புல், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர புதின் விரும்பவில்லை என்று இங்கிலாந்து உளவுத்துறை தலைவர் ரிச்சர்ட் மோரி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து உளவுத்துறை அமைப்பின் தலைவர் ரிச்சர்ட் மோரி . இவர் இம்மாத இறுதியில் பணி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் நேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ரிச்சர்ட் மோரி பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷிய அதிபர் புதின் விரும்பவில்லை. அமைதி பேச்சுவார்த்தைக்கு புதின் முன்வருவதற்கான எந்த ஆதாரமும் இல்லை. புதின் நம்மை அவருடன் இணைத்துக்கொண்டிருக்கிறார்.

புதின் தனது ஏகாதிபத்திய வழிமுறையை திணிக்க முயற்சிக்கிறார். ஆனால் அவரால் வெற்றிபெற முடியாது. உக்ரைனில் சுலபமாக வெற்றிபெற்றுவிடலாம் என்று புதின் நினைத்தார். ஆனால், அவரும் மற்றவர்களும் உக்ரைனை குறைத்து மதிப்பிட்டுவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து